உள்ளூர் செய்திகள்

பாராட்டு விழா

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் சார்பில், முன்னாள் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் அண்மையில் நடந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, பொறுபேற்றுள்ள நிலையில், முன்னாள் நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.வெள்ளியங்காடு, சிவாளா ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி குணசேகரன், குற்றவியல் நடுவர் செல்லதுரை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அவர்கள் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் மற்றும் மூத்த வக்கீல்கள் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக, வக்கீல் குமரன் முன்னிலை வகித்தார்.வக்கீல்கள் சுப்பராயன், நாராயணசாமி, உதயசூரியன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை