வரிசை கட்டும் பிரச்னை அதிகாரிகளுக்கு அர்ச்சனை
குப்பையை அள்ளுங்க...
1. திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின், வடக்கு உழவர் சந்தை நுழைவு வாயில் முன் குப்பை அள்ளாமல் நிறைந்து காணப்படுகிறது.கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. - துரைசாமி, புதிய பஸ் ஸ்டாண்ட்.2. திருப்பூர், தென்னம்பாளையம், எஸ்.கே. மருத்துவமனை வீதியில் வழிநெடுக கொட்டப்பட்டுள்ள குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை அள்ள வேண்டும்.- பாரதிராஜா, தென்னம்பாளையம். (படம் உண்டு)ஆக்கிரமிப்பு அகற்றணும்! திருப்பூர், பல்லடம் ரோடு, வீரபாண்டி செல்லும் ரிங்ரோட்டில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- மாணிக்கம், வீரபாண்டிபிரிவு. தெருவிளக்கு எரிவதில்லைதிருப்பூர், கே.பி.என். காலனி, அண்ணா நகர் விரிவு எக்ஸ்டன்சன் பகுதியில் தெருவிளக்கு எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. - சுப்பு, கே.பி.என். காலனி. (படம் உண்டு) போக்குவரத்து இடையூறுதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு ஸ்டாப், நால்ரோடு சந்திப்பில், வாகனங்கள் கடந்து செல்ல வழியில்லாமல், போக்குவரத்துக்கு இடையூறு 'பேரிகார்டு' வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். - ஆறுமுகபாலா, கோல்டன்நகர். (படம் உண்டு) புகையால் மூச்சுத்திணறல் திருப்பூர் மாநகராட்சி, ஒன்றாவது வார்டு, பிரியங்கா நகரில் குப்பைகள் தீ வைத்து எரிப்பதால், அவ்வழியாக செல்வோர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர். எனவே, குப்பைகளை அகற்ற வேண்டும். - பழனிசாமி, பிரியங்கா நகர். (படம் உண்டு) கழிவுநீரால் அவதி திருப்பூர், காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில் கழிவுநீர் ரோட்டில் திறந்து விடுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. அசுத்தம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - ராஜசேகர், ராக்கியாபாளையம். (படம் உண்டு) விழும் நிலையில் கம்பம் திருப்பூர், குமரன் ரோடு, பின்னிகாம்பவுண்ட் சந்திப்பு சாலையில் விழும் நிலையில் உள்ள கம்பத்தை அகற்ற வேண்டும். இதனால், அபாயம் காத்திருக்கிறது. - முபாரக் பாஷா, குமரன் ரோடு. (படம் உண்டு) தடுப்பது யார் அவிநாசி, தாலுகா ஆபீஸ் சுற்றுச்சுவரில் சகட்டுமேனிக்கு விளம்பர அறிவிப்பு, போஸ்டர்கள் ஒட்டப்படுகிறது. அரசு அலுவலக சுவராக இருந்தாலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. - மணி, அவிநாசி.ரியாக் ஷன் குப்பை அள்ளிட்டாங்க திருப்பூர், கல்லாங்காடு, முத்து நகரில் குப்பை தேங்கியிருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் குப்பைகள் அள்ளி விட்டனர். - ராமலிங்கம், கல்லாங்காடு. (படம் உண்டு)