வல்லமை தாராயோ... தன்னம்பிக்கை கருத்தரங்கு
அவிநாசி; அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கோவை ரோட்டரி டவுன் மற்றும் 'பீனிக்ஸ்' இணைந்து மாணவர்களுக்கான தன்னம்பிக்கை கருத்தரங்கை நடத்தினர். முதல்வர் ஹேமலதா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் கல்லுாரி பேராசிரியர் நாகநந்தி கலந்து கொண்டு 'வல்லமை தாராயோ' என்ற தலைப்பில் பேசினார். கோவை ரோட்டரி டவுன் உறுப்பினர்கள் பிரபு, சரவணகுமார், ரமேஷ், பாலன், பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரி சர்வதேச வணிகத்துறை பேராசிரியர்கள் பாலமுருகன், இந்திராணி, ரம்யா, பிரியங்கா ஆகியோர் கருத்தரங்கை ஒருங்கிணைத்தனர்.