உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டாக்ட ரிடம் தகராறு; 2 பேர் கைது

டாக்ட ரிடம் தகராறு; 2 பேர் கைது

திருப்பூர்; திருப்பூர், குமார் நகர் வளையங்காடு ரோட்டில் கிளினிக் நடத்தி வருபவர் டாக்டர் சாமி, 52. கடந்த 1ம் தேதி அதே பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன், 39 என்பவருக்கு கீழே விழந்ததில் காயம் ஏற்பட்டது. மாயகிருஷ்ணன், நண்பர் சசிக்குமாரை, 42 அழைத்து கொண்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றனர். அப்போது, டாக்டர் சாமி, சிகிச்சை பெற வந்த நபர், மதுபோதையில் இருந்த காரணத்தால், 'மாலை வாருங்கள்' என்று கூறி வெளியே அனுப்பினார். உடனே, ஆத்திரமடைந்த, இருவரும் மருத்துவமனைக்கு வெளியில் நின்று, தகாத வார்த்தையில் பேசி சத்தம் போட்டனர். தட்டி கேட்ட டாக்டரிடம் தகராறில் ஈடுபட்டு, மிரட்டல் விடுத்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ