உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரதமர் மோடி பிறந்த நாள் விழா 1,008 விளக்கு பூஜைக்கு ஏற்பாடு

பிரதமர் மோடி பிறந்த நாள் விழா 1,008 விளக்கு பூஜைக்கு ஏற்பாடு

அவிநாசி: பிரதமர் நரேந்திர மோடியின், 75வது பிறந்தநாள் விழா வரும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அவிநாசி நகர பா.ஜ., சார்பில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து பூத்களிலும் பெண்கள் கலந்து கொள்ளும் விதமாக 1,008 திருவிளக்கு பூஜை நடத்த ஏற்பாடு நடக்கிறது. இதற்கான, ஆலோசனை கூட்டம் அவிநாசி நகர தலைவர் ரமேஷ் முன்னிலையில், மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் நடந்தது. கோவை வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பிரியதர்ஷினி பேசினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !