உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொலையாளிகளை விரைவில் கைது செய்யுங்க...

கொலையாளிகளை விரைவில் கைது செய்யுங்க...

பொங்கலுார்; பொங்கலுார் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிகள் தெய்வசிகாமணி, 78 அலமேலு, 75 அவர்களது மகன் செந்தில்குமார், 46 ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.இக்கொடிய குற்றத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை கைது செய்யாததை கண்டித்து, அவிநாசி பாளையம் நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாநகரச் செயலாளர் கோகுல் ரவி தலைமை வகித்தார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கொள்கை பரப்பு செயலாளர் ராசு, கண்டியன் கோவில் ஊராட்சி தலைவர் கோபால், தமிழ்நாடு இளைஞர் முன்னேற்ற தலைவர் கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

இன்ஸ்., பேச்சுவிவசாயிகள் ஆவேசம்

ஆர்ப்பாட்டம் துவங்கிய உடன், 'அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்துவதால் கைது செய்கிறோம்,' என்று சத்தம் போட்ட அவிநாசி பாளையம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, ''எதற்காக கத்துகிறீர்கள், ரவுடிகளை போல நடந்து கொள்கிறீர்கள்,'' என்றார்.இதனை கேட்ட விவசாயிகள் ஆவேசமடைந்து, அரசுக்கு எதிராகவும், போலீசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி, ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போலீசார் கைது நடவடிக்கையை கைவிட்டு, பாதுகாப்பு பணிகளில் கவனம் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி