உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி

அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டி

உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், கலைத்திருவிழாவையொட்டி மாணவர்களுக்கான போட்டிகள் துவங்கியது. மாநில அரசு, அரசு கலைக்கல்லுாரிகளில் கலைத்திருவிழா கொண்டாடுவதற்கு நிதிஒதுக்கீடு செய்துள்ளது. மொத்தமாக, 32 போட்டிகள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் கலைத்திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளது. 'கல்லுாரியிலிருந்து வீடு வரை' என்ற தலைப்பில் வர்ணனைப்போட்டி, 'அழிந்து வரும் கலைகள்' என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, 'ஓராண்டுக்கான கல்லுாரி வரவு செலவுத்திட்டம்' என்ற கருத்தை மையமாக கொண்டு, பட்ஜெட் போர் போட்டி உள்ளிட்ட மூன்று போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில், 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் கலைச்செல்வன், இயற்பியல் துறை பேராசிரியர் அனீஸ்பாத்திமா, வணிகவியல் துறை பேராசிரியர் மரகதம் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை