மேலும் செய்திகள்
குறைந்த நேர இடைவெளியில் பஸ் இயக்க வலியுறுத்தல்
07-Oct-2024
உடுமலை : மின் வாரியம், குமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.மின்வாரியம் சார்பில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின்கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டம், குமரலிங்கம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, கொழுமம், வி.எஸ்., புரம், குப்பம்பாளையம் பகிர்மான மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால், அக்., மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.எனவே, மேற்படி பகுதி மின் நுகர்வோர், 2024 ஆக., மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, அக்., மாதத்திற்கும் செலுத்துமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
07-Oct-2024