உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அழுகிய தர்பூசணி பழங்கள் அதிகாரிகள் பறிமுதல்

அழுகிய தர்பூசணி பழங்கள் அதிகாரிகள் பறிமுதல்

பல்லடம் : பல்லடத்தில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த, 1,200 கிலோ அழுகிய தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள, பொதுமக்கள், இளநீர், நுங்கு, தர்பூசணி, பழரசம் ஆகியவற்றை உண்கின்றனர். இதன் காரணமாக, இவற்றின் விற்பனையும், தேவையும் அதிகரித்துள்ளது.இதற்கிடையே, பொதுமக்களின் உடல்நலனை பாதிக்கும் வகையில் சில ரசாயனங்களும் இவற்றில் பயன்படுத்தப்படுவது பரவலாக நடக்கிறது. இதை கண்காணித்து தடுத்து நிறுத்தும் முயற்சியில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.நேற்று, பல்லடம் நகர பகுதியில் உள்ள பழம் மற்றும் குளிர்பானம் விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் விஜய லலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அதில், மங்கலம் ரோட்டில், ஒரு கடையில், விற்பனைக்கு வைத்திருந்த தர்பூசணி பழங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தர்பூசணி பழங்களை நீரில் நனைத்தும், தண்ணீருக்குள் போட்டும், நிறமிகள் ஏதேனும் கலக்கப்பட்டுள்ளதா என சோதனை நடந்தது.இதனையடுத்து, கடையில் வைத்திருந்த தர்பூசணி பழங்களில், 1,200 கிலோ எடை கொண்ட பழங்கள் அழுகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை சட்ட விதிகளின்படி, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி