உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உதவித்தொகை வழங்கல்

உதவித்தொகை வழங்கல்

உடுமலை : மடத்துக்குளம், போத்தநாயக்கனுாரை சேர்ந்த, தசரதன், 61. உடுமலை பாலப்பம்பட்டியிலுள்ள விக்டஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.கடந்த, 2018 முதல் இ.எஸ்.ஐ., சட்டத்தின் கீழ் காப்பீட்டாளராக இருந்து வந்தார். அவர், ஜூன், 10ம் தேதி, பணி முடித்து, தனது பைக்கில் வீடு திரும்பும் போது, சாலை விபத்தில் பலியானார். மேலும், ஒரு காப்பீட்டாளர் பணியின் போதோ, சாலை விபத்தின் போதோ, மரணம் அடைந்தால், இ.எஸ்.ஐ., திட்டத்தின் தொழில் சார்ந்த விபத்தாக கருதி, காப்பீட்டாளரை சார்ந்துள்ள குடும்பத்திற்கு சார்ந்தோர் உதவி பயன் வழங்கப்படும்.அதன் அடிப்படையில், கோவை மண்டல துணை இயக்குனர் ரவிக்குமார், துணை இயக்குனர் பெருமாள் ஆகியோர், இதனை தொழில் சார்ந்த விபத்தாக கருதி, தொழிலாளி குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க உத்தரவிட்டனர்.இதனையடுத்து, மறைந்த தொழிலாளி தசரதன் மனைவிக்கு, சார்ந்தோர் உதவி தொகையாக, மாதம் தோறும், ரூ.7,180 வழங்குவதற்கான உத்தரவு, உடுமலை இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை