உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி பெற்ற விருது; கமிஷனரிடம் ஒப்படைப்பு

மாநகராட்சி பெற்ற விருது; கமிஷனரிடம் ஒப்படைப்பு

திருப்பூர்,; திருப்பூர் மாநகராட்சி சார்பில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் சேவை மையம் மாவட்ட அளவிலான தகவல் ஒருங்கிணைப்பு மையமாகவும் விளங்குகிறது. 'ஸ்கேடா' தொழில் நுட்பம் மூலம் குடிநீர் வினியோகம், சுத்திகரிப்பு மைய செயல்பாடுகள் ஆகியன மேற்கொள்ளப்படுகிறது.இவற்றின் சேவை மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை பதிவு செய்த, டில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'ஸ்காச்' அமைப்பு அதற்கான இரண்டு விருதுகளை அறிவித்தது.டில்லியில் நடந்த இதன் நுாறாவது விருது வழங்கும் விழாவில், திருப்பூர் மாநகராட்சிக்கு இந்த சேவைக்கான இரு விருதுகள் வழங்கப்பட்டன. திருப்பூர் மேயர் தினேஷ்குமார் விழாவில், பங்கேற்று பெற்று கொண்டார். இந்தை விருதுகளை, மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தியிடம் மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் நேற்று ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை