கால்நடைத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்
உடுமலை: உடுமலை கால்நடைத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. உடுமலை கால்நடைத்துறை சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம், மடத்துக்குளம், மெட்ராத்தி ஊராட்சி ராமலிங்காபுரத்தில் நடந்தது. கால்நடைத்துறை கோட்ட உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சித்தலைவர் தங்கராஜ் துவக்கி வைத்தார். கால்நடை டாக்டர்கள் ஹரிபிரசாத், கார்த்திகேயன் மற்றும் மருத்துவ குழுவினர், 900க்கும் மேற்பட்ட, ஆடு, மாடு, கோழி மற்றும் செல்லப்பிராணிகளுக்கு உரிய சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணிகளை மேற்கொண்டனர். மேலும், இம்முகாமில், சிறந்த கிடாரி கன்றுகள் வளர்ப்போர் மற்றும் கால்நடை பராமரிப்போருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.