மேலும் செய்திகள்
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
15-Oct-2025
உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில், வளர் இளம் பருவ மாணவ மாணவியர்க்கான சமூக இன்னல்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்விக்கழக செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் பேசுகையில், ''மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால், வேறு மனச்சிதறல்கள் ஏற்படாது'' என்றார். உதவி தலைமை ஆசிரியர் சேஷநாராயணன் வரவேற்றார். திருப்பூர் சமூக நலத்துறை பெண்கள் உதவி மைய களப்பணியாளர் சபீனா பேகம், சிறார் உதவி மையம் மேற்கொள்ளும் பணிகள் குறித்து விளக்கினார். பெண்கள் உதவி மைய சட்ட ஆலோசகர், சத்தியவாணி, குற்றப் பின்னணியில் மாணவர்கள் செல்லும் பொழுது ஏற்படும் பிரச்சனைகள், அதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். இடைநிலை உதவி தலைமை ஆசிரியை பார்வதி நன்றி கூறினார்.
15-Oct-2025