உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விபத்து இல்லாமல் பஸ் இயக்க பஸ் டிரைவருக்கு விழிப்புணர்வு

விபத்து இல்லாமல் பஸ் இயக்க பஸ் டிரைவருக்கு விழிப்புணர்வு

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, பஸ் டிப்போவில், திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில், அரசு பஸ் டிரைவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. டிப்போ பொதுமேலாளர் சுப்ரமணியம் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக, மாநகர போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் சேகர் பங்கேற்று, விபத்தின்றி பஸ்கள் இயக்கும் வழிமுறை, டிரைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய போக்குரவத்து விதிமுறைகள் ஆகியன குறித்து சிறப்புரை ஆற்றினார். திருப்பூர் தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஒருங்கிணைத்தார்.சாலை விதிகளை பின்பற்றி, விபத்து இல்லாமல் பஸ் இயக்குவது எப்படி, பொது போக்குவரத்தில் பணியாற்றுபவர் பொறுப்பு உணர்ந்து வேலை செய்வது குறித்து அரசு பஸ் டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில்,75 டிரைவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ