உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விழிப்புணர்வு ஓவிய போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு

விழிப்புணர்வு ஓவிய போட்டி; மாணவர்களுக்கு அழைப்பு

திருப்பூர் : 'துாய்மையே சேவை 2024' தலைப்பில் விழிப்புணர்வு ஓவியம் வரைய பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில், திருப்பூர் மாநகராட்சி துாய்மை இந்தியா திட்டத்தில், 'துாய்மையே சேவை 2024' என்ற தலைப்பில் துாய்மைப் பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் ஓவியப் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களின் ஓவியங்கள், மாநகராட்சி சார்ந்த அலுவலக கட்டடங்களில் வெளிப்புற சுவர்களில் மாணவர்கள் வரையும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.இதில் விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் ஓவிய மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து, பின் வரும் இ மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இ மெயில் முகவரி gmail.comஎன்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் சுகாதாரப் பிரிவை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை