உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆயுத பூஜை - விஜயதசமி; 180 கிலோ பூசணி விற்பனை

ஆயுத பூஜை - விஜயதசமி; 180 கிலோ பூசணி விற்பனை

பல்லடம்,; நாளை (அக். 1) ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், பல்லடம் உழவர் சந்தையில் நேற்று பூசணி, தேங்காய், வாழைப்பழம் விற்பனை ஜோராக நடந்தது. ஆயுத பூஜைக்கு பின் வீடு, நிறுவனங்களில் திருஷ்டி கழித்து, பூசணிக்காய் உடைக்கப்படுவது வழக்கம். இதற்காக, பிற தினங்களை விட ஆயுதபூஜைக்கு முந்தைய நாட்களில் பூசணி வரத்தும், விற்பனையும் ஜரூராக இருக்கும். பல்லடம் உழவர் சந்தைக்கு நேற்று, 180 கிலோ பூசணிக்காய் விற்பனைக்கு வந்தது. கிலோ 15 - 20 ரூபாய்க்கு விற்றது. நேந்திரம், கற்பூரவள்ளி, செவ் வாழை, பூவன்பழம் உள் ளிட்ட வாழைப் பழங்கள், 480 கிலோ விற்பனைக்கு கொண்டு வரப் பட்டது. கிலோ 35 - 45 ரூபாய் வரை விற்கப்பட்டது. அடுத்தடுத்த விசேஷ நாட்கள் என்பதால், எலுமிச்சை விலை கிலோவுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பல்லடம் மார்க்கெட், கடை வீதிகளில் நேற்று மாலை துவங்கி, இரவு வரை ஆயுத பூஜை பூ, பழங்கள், வண்ண காகிதங்கள் விற்பனைசுறுசுறுப்பாக நடந்தது. உழவர் சந்தை அலுவலர்கள் கூறுகையில், 'வரத்து அதிகரிப்பால், பூஜைக்கான பொருட்கள் விலை சற்று குறைந்துள்ளது. முதல் நாளே (நேற்றே) பொருட்களை வாங்க பலரும் சந்தைக்கு வந்ததால், விற்பனை ஜோராக நடந்தது. இன்றும் விற்பனை அதிகமாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !