உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறுமிக்கு பிறந்த குழந்தை

சிறுமிக்கு பிறந்த குழந்தை

திருப்பூர்; திருவாரூரை சேர்ந்த, 17 வயது சிறுமி தாய் இறந்த நிலையில், பாட்டி பராமரிப்பில் இருந்து வந்தார். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, 18 வயதான உறவினரை திருமணம் செய்து, கடந்த அக்., மாதம் திருப்பூர் வந்தார். கர்ப்பமான சிறுமி பாட்டி வீட்டுக்கு சென்றார். சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு, 18 வயது நிறைவடையாததால், மருத்துவமனை தரப்பில் திருப்பூர் கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். புகாரின் பேரில், 18 வயது உறவினர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !