உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட ஆண் சிசு

திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோடு பெரிச்சிபாளையத்தில் உள்ள குப்பை தொட்டியில், ஆண் சிசு சடலம் கிடப்பதாக தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சிசுவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குறை பிரசவத்தில் பிறந்து இறந்த நிலையில் வீசி சென்றார்களா அல்லது தவறான முறையில் பிறந்த குழந்தையா என்பதால் வீசி சென்றார்களா என்பது குறித்து அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா பதிவுகளை பார்வையிட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை