உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இறைச்சி விற்பனைக்கு இன்று தடை

இறைச்சி விற்பனைக்கு இன்று தடை

உடுமலை : உடுமலையில் இன்று, ஆடு, மாடு, கோழி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தி தினமான இன்று, உடுமலை நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும், ஆடு, மாடு, கோழி, பன்றி இறைச்சி கடைகள் மற்றும் ஆடு வதைக்கூடம் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.எனவே, உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இறைச்சி விற்பனை செய்யக்கூடாது. மீறி செயல்பட்டால், இறைச்சிகள் பறிமுதல் செய்து அழிக்கப்படுவதோடு, உரிமம் ரத்து செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படுவதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என நகராட்சி கமிஷனர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ