மேலும் செய்திகள்
கரன்சி குளியலில் கார்ப்பரேஷன் அதிகாரிகள்
12-Nov-2024
திருப்பூர்: பனியன் நிறுவன உரிமையாளர் வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் பார்த்திபன் சாமி, 53; இவர் அனுப்பர்பாளையத்தில் பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் திருப்பூர் - வஞ்சிபாளையம் இடையே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.தற்கொலைக்கு முன்னதாக, அவர் பேசிய வீடியோவில், ''என் கடனுக்கு காரணமான நொச்சிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்நிறுவனம், 1.5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அதை கொடுத்து இருந்திருந்தால், நான் சமாளித்து இருப்பேன். பணம் வாங்குவதற்காக பலமுறை அலைந்தும் தரவில்லை,'' என்று கூறியுள்ளார். திருப்பூர் ரயில்வே போலீசார் விசாரித்தனர்.
12-Nov-2024