உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேதமடைந்த வாய்க்கால் வழி பி.ஏ.பி., அதிகாரிகள் ஆய்வு

சேதமடைந்த வாய்க்கால் வழி பி.ஏ.பி., அதிகாரிகள் ஆய்வு

பல்லடம், ; பல்லடம், -மங்கலம் ரோட்டில், -ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகர் செல்லும் வழியில் பி.ஏ.பி., வாய்க்கால் வழித்தடம் உள்ளது.எண்ணற்ற வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்லும் நிலையில், வழித்தடத்தின் ஒரு பகுதி சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் விழுந்து வாகன ஓட்டிகள் பலர் காயமடைந்துள்ளனர். எனவே, ஆபத்தான பள்ளத்தை மூடி வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என, இப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று முன் தினம் டூவீலரில் சென்ற ஒருவர் விழுந்து காயம் அடைந்ததால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சீரமைப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, மக்கள் மறியலை கைவிட்டனர்.இந்நிலையில், பி.ஏ.பி., பாசன திட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள், சேதமடைந்த வழித்தடத்தை நேற்று ஆய்வு செய்தனர். இதனால், வழித்தடத்தை சீரமைக்கும் பணி விரைவில் துவங்கும் என்று நம்புவதாகவும், இல்லாவிடில், மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை