வக்கீல் சங்க நிர்வாகிகள் தேர்தல் இன்று நடக்குது ஓட்டுப்பதிவு
திருப்பூர்: திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட்களில் வழக்குகளில் பணியாற்றும் வக்கீல்கள், 'திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம்,' என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இந்த சங்கத்தின், 2025-26ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அலுவலராக வக்கீல் குமரன் வேட்பு மனுக்கள் பெற்றார்.இதில் மொத்தம், 21 பேர் பல்வேறு பதவிகளுக்கு மனுத் தாக்கல் செய்தனர். இதில், 7 மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. சங்க தலைவர் பதவிக்கு உதயசூரியன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரும், துணை தலைவர் பதவிக்கு சத்யமூர்த்தி, சகுந்தலா மற்றும் சுதாகர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.மேலும், செயலாளராக விஜய் ஆனந்தன், பொருளாளராக முத்துலட்சுமி, துணை செயலாளராக நந்தகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர செயற்குழு உறுப்பினர்களாக, செல்வம், பிரபாகரன், விகாஷ், ஹரி புருஷோத்தமன், ராஜகோபால் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.