உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுனிதா வில்லியம்ஸ் போல் உருவாக வேண்டும்!  அரசு கல்லுாரி மாணவியருக்கு அறிவுறுத்தல்

சுனிதா வில்லியம்ஸ் போல் உருவாக வேண்டும்!  அரசு கல்லுாரி மாணவியருக்கு அறிவுறுத்தல்

திருப்பூர்: ''அரசு கல்லுாரி மாணவியர் தேசிய, சர்வதேச அளவில் சாதிப்பவராக, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களாக உருவாக வேண்டும்,'' என, கொல்கத்தா, இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வக, விஞ்ஞானி (கிழக்கு பிராந்தியம்) தீபு விஜயன் அறிவுரை வழங்கினார்.திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், உயிரியல் தொழில் முனைவோர் மாநாடு நடந்தது. கல்லுாரி துறைத்தலைவர் பாலசரவணன் தலைமை வகித்தார்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கொல்கத்தா, இந்திய தாவர மதிப்பீட்டு ஆய்வக, விஞ்ஞானி (கிழக்கு பிராந்தியம்) தீபு விஜயன் பேசியதாவதுசுனிதா வில்லியம்ஸ், 286 நாட்கள் விண்வெளி மையத்தில் தங்கியிருந்து, பூமியை, 4,577 முறை சுற்றி, 19.52 கோடி கி.மீ., துாரம் பயணம் செய்து, பூமிக்கு திரும்பி சாதனை படைத்துள்ளார். 17 மணி நேரம், விண்கலத்தில் ஒரே நிலையில் அமர்ந்து வருவது சாதாரண விஷயமல்ல.அறிவியலின் ஒவ்வொரு நிலையை அறிந்து கொண்டு நாம் முன்னேறி கொண்டே இருக்க வேண்டும். இளங்கலை, முதுகலை, ஒரு வேலை என்பதுடன் கல்வித் தேடல் முடிந்து விடக்கூடாது. எண்ணம், இலக்கு மிக உயர்ந்ததாக இருக்க வேண்டும்.அரசு கல்லுாரி மாணவியர் தேசிய, சர்வதேச அளவில் சாதிப்பவராக, சுனிதா வில்லியம்ஸ் போன்றவர்களாக உருவாக வேண்டும். அதற்கான தன்னம்பிக்கை, திறமை, முயற்சியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். விண்வெளி குறித்த படிப்புகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.மாநாட்டில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், இளம் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை