உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பீட்ரூட் விளைச்சல் சரிவு; விவசாயிகள் கவலை

பீட்ரூட் விளைச்சல் சரிவு; விவசாயிகள் கவலை

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, ஆண்டுக்கு மூன்று சீசன்களில், பீட்ரூட் சாகுபடி செய்கின்றனர். பருவமழை காலத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதால், கோடை சீசனை இலக்கு வைத்து நடவு செய்வது வழக்கம்.அவ்வகையில், இந்தாண்டு, மார்ச் மாதத்தில், பரவலாக பீட்ரூட் சாகுபடிக்கான நடவு மேற்கொள்ளப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக, முன்னதாகவே கோடை வெயில் கொளுத்தியது. இதனால், விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட்டது; நுனி கருகல் உள்ளிட்ட நோய்த்தாக்குதலும் அதிகரித்து, செடிகளின் இயல்பான வளர்ச்சி குறைந்தது.நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, விவசாயிகள் மருந்து தெளித்தனர்; கூடுதலாக தண்ணீரும் பாய்ச்சினர். இவ்வாறு, பல கட்ட போராட்டத்துக்குப்பிறகு, பீட்ரூட் அறுவடைக்கு தயாராகும் போது, கோடை கால மழை துவங்கியது. திடீர் மழையால், அறுவடை பணிகளில் தாமதம் ஏற்பட்டது.விவசாயிகள் கூறியதாவது: இந்த சீசனில், வெயிலின் தாக்கத்தால், பீட்ரூட் செடிகளின் வளர்ச்சி பாதித்தது. ஏக்கருக்கு, 14 டன் வரை கிடைத்து வந்த விளைச்சல், பாதியாக குறைந்து விட்டது.கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் உள்ளது. இருப்பினும், தரம் பாதித்துள்ளதால், போதிய விலை கிடைப்பது கேள்விக்குறியாக உள்ளது. பீட்ரூட்டை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய வழி ஏற்படுத்தினால், அனைத்து சீசன்களிலும் பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை