உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நலத்திட்ட உதவி பெற காத்திருப்பு; பசியால் வாடிய பயனாளிகள்

நலத்திட்ட உதவி பெற காத்திருப்பு; பசியால் வாடிய பயனாளிகள்

திருப்பூர்; முதல்வர் ஸ்டாலின் நேற்று உடுமலையில், அரசு விழாவில் பங்கேற்று, மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தாலுகா வாரியாக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த தாலுகா பகுதியில் ஒரு இடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள், வித்யா கார்த்திக் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. இதற்காக நேற்று காலை 8:00 மணி முதலே பயனாளிகள் மண்டபத்துக்கு வந்து காத்திருக்கத் துவங்கினர். உடுமலையில் நடந்த விழாவில் நலத்திட்டஉதவிகளை முதல்வர் வழங்கி பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். அதன்பின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பலரும் பசியால் வாடியபடி காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை