உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பாரதி அகாடமி மாணவர் நீட் தேர்வில் அபாரம்

பாரதி அகாடமி மாணவர் நீட் தேர்வில் அபாரம்

திருப்பூர்: விஜயமங்கலம் பாரதி அகாடமி மாணவன் அகிலன், 'நீட்' தேர்வில் தேசிய அளவில், 928-வது ரேங்க் பெற்று சாதித்துள்ளார். இயற்பியல் - 152 மார்க்; வேதியியல் - 131 மார்க்; உயிரியல் -325 மார்க் என 720க்கு 608 மார்க் பெற்றுள்ளார். பாரதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர், இவர்.சச்சின் என்ற மாணவர், 557 மார்க் பெற்று இரண்டாமிடம், தனிகா என்ற மாணவி 556 மார்க் பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 'நீட்' தேர்வு எழுதிய 150 மாணவர்களில் 70க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிறுவனத்தின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார். வெற்றி பெற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், பயிற்சியளித்த ஆசிரியர்களை பாரதி கல்வி நிறுவன தாளாளர் மோகனாம்பாள் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை