மேலும் செய்திகள்
போலீஸ் டைரி
19-Jun-2025
திருப்பூர்; திருப்பூரை சேர்ந்தவர், 17 வயது சிறுமி; தாயுடன் வசித்து வந்தார். இவரது தாய், இரண்டாவதாக, பீஹாரை சேர்ந்த அபய் குமார், 40 என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், நான்கு மாதம் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் அபய்குமார் மீது 'போக்சோ' வழக்குபதிவு செய்தனர்.உடனே பீஹாருக்கு தப்பி சென்று தலைமறைவானார். கடந்த ஆறு மாதமாக சிக்காமல் இருந்த அவர், நேற்று திருப்பூர் வந்த போது, போலீசார் கைது செய்தனர்.
19-Jun-2025