உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிற்சி வளர்ச்சிக்கு உயிரியல் தொழில்நுட்பம்

பயிற்சி வளர்ச்சிக்கு உயிரியல் தொழில்நுட்பம்

பல்லடம்: பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிரியல் தொழில்நுட்பம் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் பல்லடம் வட்டார விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர். விவசாய நிலங்களில் கள ஆய்வு, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்ட மாணவர்கள், பி.பி.எம்.எப்., எனும் நன்மை தரும் நுண்ணுயிரி பயிர் வளர்ச்சியை ஊக்குவித்து, வறட்சியால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க உதவும் என தெரிவித்தனர். இதனை பயன்படுத்துவதால் விதை முளைப்பு, நாற்று வளர்ச்சி, இலைப்பரப்பு, பச்சையத்தின் அளவு அதிகரிப்பதுடன், பூத்தல், காய்கள் உருவாகுதல், பழங்கள் முதிர்தல் ஆகியவையும் விரைவடையும். விளைபொருட்களின் தரம், நிறம், விதையின் எடை மேம்படவும் உதவும். நெல் உள்ளிட்ட பயிர்களில் இதனை பயன்படுத்தி, பயிர் வளர்ச்சி மற்றும் வறட்சியை தாங்கும் திறனை மேம்படுத்தலாம். விவசாயிகள் உயிரியல் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான விவசாய முறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர். விவசாய நிலங்களில் மருந்து தெளிக்கும் முறைகள் குறித்து மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பல்லடத்தில் வேளாண் பல்கலை மாணவர்கள், உயிரியல் தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை