காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் பறவை பாதுகாப்பு கருத்தரங்கு
திருப்பூர்; திருப்பூர், காந்தி நகர், ஏ.வி.பி., டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில், 'பறவைகள் பாதுகாப்பு' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஏ.வி.பி., கல்விக்குழுமங்களின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திருப்பூர் இயற்கை பாதுகாப்பு கழக தலைவர் ரவீந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார். பள்ளி முதல்வர் ராஜேஷ் வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் மோகனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி மாணவர் மன்றத்தினர் ஆசிரியர்களுடன் இணைந்து செய்திருந்தனர்.