உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தளி எத்தலப்ப மன்னர் பிறந்தநாள் விழா

தளி எத்தலப்ப மன்னர் பிறந்தநாள் விழா

உடுமலை ; உடுமலையில், தளி எத்தலப்ப மன்னர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.உடுமலை, தளி பகுதியை தலைமையிடமாகக்கொண்டு, 1750 முதல் 1801 வரை தென்கொங்கு நாடான உடுமலை வட்டாரப் பகுதிகளில், ஆட்சி செய்தவர் பாளையக்காரர் தளி எத்தலப்பர்.அவரது ஆட்சிக்காலத்தில், 1801 ஏப்ரல் 23ல் துாது வந்த ஆங்கிலேய அதிகாரியை துாக்கிட்டுக்கொன்ற, சுதந்திர போராட்ட வீரரான தளி பாளையக்கார மன்னர் எத்தலப்பருக்கு, உடுமலை நகராட்சி அலுவலகத்தில் சிலை மற்றும் திருமூர்த்திமலையில், அரங்கம் அமைக்கப்பட்டுள்ளன.ஆண்டு தோறும், பிப்., 12ல், அவரது பிறந்த தினமாக, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினராலும், அவர் சார்ந்த சமூக இயக்கங்கள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், உடுமலை வரலாற்று நடுவம் சார்பில், தளி எத்தலப்ப மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.வரலாற்று ஆய்வு நடுவத்தின் நிர்வாகிகள், மதியழகன், விஜயலட்சுமி, செயலாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தளி எத்தலப்ப மன்னருக்கு அரசின் சார்பில், பிறந்த நாள் விழா கொண்டாட வேண்டும், என உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை