உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ., மறியல்

சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ., மறியல்

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டில், பல இடங்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி, சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது.இவ்வாறு தண்ணீர் தேங்குவதால், ரோடு, பல இடங்களில் குண்டும் குழியுமா மாறி விட்டது. ஆனால், ரோட்டை முறையாக சீரமைக்காமல் பணிகள் நடப்பதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அப்பகுதியினர் கலெக்டர், மாநகராட்சியினரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், ரோட்டை முறையாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பாளையக்காடு சிக்னல் அருகே மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர், நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.பாளையக்காடு கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மண்டல தலைவர்கள் நாகேந்திரன், மந்தராச்சலமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். தகவலறிந்து சென்ற வடக்கு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.அனைத்து பிரச்னைகளையும், நான்கு நாட்களுக்குள் சரி செய்வதாக உறுதியளித்தார். இதனால், மறியல் கைவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை