உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எலும்பை முறிக்கும் சாலை

எலும்பை முறிக்கும் சாலை

திருப்பூர், பல்லடம் ரோட்டில் இருந்து முத்தணம்பாளையம், வெள்ளியங்காடு, பெரிச்சிபாளையம் செல்லும் பிரதான சாலையாக தென்னம்பாளையம் சாலை உள்ளது. சிக்னல் சந்திப்பில் இருந்து, 50மீ. துாரத்துக்கு சாலை சேதமாகி, குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, சறுக்கும் சாலையாக மாறியுள்ளது. குழியால் வாகனங்கள் திடீரென வலது மற்றும் இடது புறம் திரும்புவதால், பல்லடம் ரோட்டில் இருந்து வளைவில் திரும்பும் டூவீலர் வாகன ஓட்டிகள் தினசரி விழுந்து எலும்புகள் நொறுங்குவது வாடிக்கையாக உள்ளது. மழை பெய்த சில நாட்களில் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை