உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளியில் புத்தகம் வினியோகம் 

பள்ளியில் புத்தகம் வினியோகம் 

திருப்பூர் ; அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டது.அரையாண்டு தேர்வு முடிந்து டிச., இறுதி வாரம் பள்ளிகளுக்கு ஒன்பது நாள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று, துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் இறைவணக்க கூட்டம் முடிந்து, வகுப்பறைக்கு சென்ற மாணவ, மாணவியருக்கு வகுப்பாசிரியர், ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை வழங்கினர்.கடந்த வாரமே, மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, வகுப்புக்கு இவ்வளவு புத்தகம், நோட்டு என பட்டியலிட்டு, வகைப்படுத்தப்பட்டு விட்டதால், நேற்று மதியத்துக்குள் அனைத்து குழந்தைகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டது.புதிய புத்தகங்களை ஆர்வமுடன் துவக்க பள்ளி குழந்தைகள் பார்த்தனர். மதிப்பீடு செய்யப்பட்ட அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் அந்தந்த பாட ஆசிரியர்கள் வாயிலாக மாணவ, மாணவியருக்கு நேற்றே வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி