உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரம்ம குமாரிகள் அமைப்பின் கோடை கால பயிற்சி முகாம்

பிரம்ம குமாரிகள் அமைப்பின் கோடை கால பயிற்சி முகாம்

உடுமலை; உடுமலை பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு முகாம் நடந்தது.உடுமலை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால சிறப்பு பயிற்சி முகாம் கொழுமம் ரோடு பிரம்ம குமாரிகள் அமைப்பின் அமைதி இல்லத்தில் நடக்கிறது.முகாம் காலை, 10:00 மணிக்கு துவங்கியது. துவக்க நிகழ்ச்சியில் பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த ஜனஸ்சுருதி அந்த அமைப்பு குறித்து விளக்கமளித்தார். அமைப்பைச் சேர்ந்த ஜூவிதா நடனமாடினார்.டாக்டர் இப்ராஹிம், வக்கீல் மலர்விழி, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜமோகன், டாக்டர் கிருத்திகா முன்னிலை வகித்தனர்.உடுமலை மற்றும் மடத்துக்குளம் பிரம்ம குமாரிகள் கிளை நிலைய பொறுப்பாளர் மீனா, ராஜயோக தியானம் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முகாமில் பங்கேற்றனர்.தொடர்ந்து பயிற்சியாளர் செல்வகுமார், உடற்பயிற்சி முறைகள் குறித்து செயல்விளக்கமளித்தார்.மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சிகள், உடற்பயிற்சி, நினைவாற்றல் விளையாட்டுகள், பொழுதுபோக்கு கலைநிகழ்ச்சிகள், நற்பண்புகளை வளர்க்கும் செயல்முறைகள், திறன்களை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், தியானம் உள்ளிட்ட செயல்பாடுகள் நடந்தது. மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ