ரேவதி மெடிக்கல் சென்டரில் இன்று மூளை, நரம்பியல் சிகிச்சை முகாம்
திருப்பூர்: திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் இன்று (2ம் தேதி) காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரைசிறப்பு மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை ஆலோசனை முகாம் நடக்கிறது. சிறப்பு மூளை மற்றும் நரம்பியல் சிகிச்சை நிபுணர் சிவகுமார் மருத்துவ ஆலோசனைகள் வழங்குகிறார். நரம்பியல் சிகிச்சை நிபுணர், பிசியோதெரபி மருத்துவர், தொழில் வழி மருத்துவர், உணவியல் நிபுணர் ஆலோசனை, சர்க்கரை, உப்பு, முழு கொழுப்பு அளவு பரிசோதனைகள் முற்றிலும் இலவசம். பரிந்துரைக்கப்படும் எம்.ஆர்.ஐ., ஸ்கேனுக்கு சலுகை கட்டணமாக 3000 ரூபாய்; சி.டி., ஸ்கேன்களுக்கு 1500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தலைசுற்றல், தலைவலி, வாய் குழறல், அடிக்கடி மயக்கம், கை-கால் உணர்ச்சிக் குறைவு, பக்கவாதம், வலிப்பு மற்றும் குழந்தைகளுக்கான நரம்பியல் குறைபாடுகள் இருப்போர் பயன்பெறலாம். முன்பதிவு மற்றும் தொடர்புக்கு: 98422 09999, 98422 11116.இத்தகவலை ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.