உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரகாசமான எதிர்காலத்துக்கு பிரைட் பப்ளிக் பள்ளி இருக்கு!

பிரகாசமான எதிர்காலத்துக்கு பிரைட் பப்ளிக் பள்ளி இருக்கு!

திருப்பூர்; திருப்பூர், காங்கயம் ரோடு, விஜயாபுரம் பிரிவு, பிரைட் பப்ளிக் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.இப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இப்பள்ளி மாணவி ஷஹினா, 500க்கு, 488 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ரிதமிகா, 484 மதிப்பெண் பெற்று, 2வது இடம்.மாணவி தர்ஷினி, 483 பெற்று மூன்றாமிடம். மேலும், 475க்கு மேல், நான்கு பேரும், 450க்கு மேல் ஒன்பது பேரும், 400க்கு மேல், 11 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவர் முகேஷ் கண்ணா கணிதத்தில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளார். பள்ளியில், தேர்வெழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஷஹிவானுக்கு, அன்பு அறக்கட்டளை தலைவர் வக்கீல் மோகன் கேடயம் வழங்கி, பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கினார்.சாதனை படைத்த அனைத்து மாணவ, மாணவிகளையும் அறக்கட்டளையின் தலைவர் வக்கீல் மோகன், துணை தலைவர் உத்தமன், பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளி அறங்காவலர்கள், பள்ளியின் துணை முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி