உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உடைந்த குழாய்கள்; சீரழிந்த சாலைகள்

உடைந்த குழாய்கள்; சீரழிந்த சாலைகள்

ஒளிராத விளக்குதிருப்பூர், 32வது வார்டு, கோல்டன் நகர் மெயின் ரோட்டில் தெருவிளக்கு, 15 நாட்களாக எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- அபுதாகிர், கோல்டன்நகர். (படம் உண்டு)கால்வாய் அடைப்புதிருப்பூர், 28வது வார்டு, கொங்கணகிரி இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.- திருமூர்த்தி, கொங்கணகிரி. (படம் உண்டு)நாய்கள் தொல்லைதிருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் நாய்த்தொல்லை அதிகமாக உள்ளது. சுற்றித்திரியும் நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும்.- ஜோசப், காதர்பேட்டை. (படம் உண்டு)கழிவுநீரால் அவதிதிருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையம் - கே.வி.ஆர்., நகர் வழியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- அருண்குமார், பாரப்பாளையம். (படம் உண்டு)-

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- செல்வமணி, பாளையக்காடு. (படம் உண்டு)திருப்பூர், ராயபுரம், விநாயகபுரம் முதல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது; சாலை குழியாகியுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.- கணபதி, விநாயகபுரம். (படம் உண்டு)திருப்பூர், ராம் நகர், ஸ்ரீ சாய் ஸ்கூல் வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி, சாலை சேதமாகி வருகிறது.- செந்தில்குமார், ராம் நகர். (படம் உண்டு)திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் குழாய் உடைந்து அங்காங்கே தண்ணீர் வீணாகி சாலை சேதமாவது தொடர்கதையாக உள்ளது. குழாய் உடைப்பை சீர் செய்வதுடன், சாலையையும் சீரமைக்க வேண்டும்.- விஜி, கூட்டுறவு நகர். (படம் உண்டு)

ரியாக் ஷன்

தெருவிளக்கு 'பளிச்'திருப்பூர், 32 வது வார்டு, கோல்டன்நகர், பகவான் நகரில் தெருவிளக்கு எரியாமல் இருப்பது குறித்து 'தினமலரில்' செய்தி வெளியானது. இதனால், தெருவிளக்கு சீர்செய்யப்பட்டு, எரிகிறது.- ராஜேந்திரன், பகவான் நகர். (படம் உண்டு)குப்பை அள்ளிட்டாங்க...பல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, நொச்சிபாளையம், பண்டரி நகரில் குப்பை தேங்கியுள்ளது குறித்து, 'தினமலர்' செய்தியால், குப்பை அள்ளப்பட்டு விட்டது.- குமார், கரைப்புதுார். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை