மேலும் செய்திகள்
சாக்கோட்டையில் அரசு அலுவலக கட்டடம் இழுபறி
30-Dec-2024
ஊராட்சி அலுவலக கட்டடம் திறப்பு
04-Jan-2025
சென்னை; திருப்பூர் மாநகராட்சிக்கு, 46.80 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அலுவலக கட்டடம் அமைக்க அரசு நிதி ஒதுக்கி, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.திருப்பூர் மாநகராட்சி, 159.35 ச.கி.மீட்டராகும். 13.99 லட்சம் மக்கள் தொகையை கொண்டுள்ள மாநகராட்சியில், கணியாம்பூண்டி, நாச்சிபாளையம் ஆகிய ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.எனவே, நிர்வாக தேவைகளை நிறைவு செய்யவும், மக்களுக்கான சேவையை மேம்படுத்தவும், பேசதிய வசதிகளுடன் கூடிய, புதிய அலுவலக கட்டடம் திருப்பூர் மாநகராட்சிக்கு கட்டப்பட உள்ளது. அம்மாநகராட்சிக்கு சொந்தமான, 3.32 ஏக்கர் பரப்பளவில் உள்ள கட்டடத்தில், அங்குள்ள மருத்துவ துறை சார்ந்த கட்டடத்தை அகற்றி, புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணி நடைபெற உள்ளது. இதற்காக, 46.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, நகராட்சி நிர்வாகத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மொத்தம், 96,432 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், இரண்டு தளங்களுடன் அலுவலக பகுதி, உயர் அலுவலர்களுக்கான காத்திருப்பு அறை, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்துாக்கிகள், சாய்வுதளங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
30-Dec-2024
04-Jan-2025