உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  காளைகள் விலை சந்தையில் உயர்வு

 காளைகள் விலை சந்தையில் உயர்வு

திருப்பூர்: நேற்று கூடிய அமராவதிபாளையம் மாட்டுச்சந்தைக்கு, 882 கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. கன்றுக்குட்டி 4,000 - 5,000 ரூபாய், காளை, 30 ஆயிரம் - 32 ஆயிரம், மாடு, 28 ஆயிரம் - 30 ஆயிரம், எருமை, 27 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் வருகையும் அதிகரித்ததால், விலை உயர்ந்தது. கடந்த வாரத்தை விட நடப்பு வாரம் காளைகள், ஆயிரம் ரூபாயும், எருமை, 3,000 ரூபாயும் விலை உயர்ந்தது. மாடு, கன்றுக்குட்டி விலையில் மாற்றமில்லை. கடந்த வாரம், 662 கால்நடைகள் வந்திருந்தன. நடப்பு வாரம், 882 ஆக வரத்து உயர்ந்தது. 1.56 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி