பஸ் ஊழியர் கோரிக்கைகள் பி.எம்.எஸ்., ஆர்ப்பாட்டம்
திருப்பூர்; அரசு பஸ் ஊழியர்களுக்கு ஆறு சதவீத சம்பள உயர்வு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது; அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்பட வேண்டும். மேலும் 12 மாதங்களுக்கான நிலுவைத்தொகையும் வழங்கப்படவில்லை. இதை முறையாக வழங்க வலியுறுத்தியும், மதுரையில் பஸ் ஊழியரை தாக்கிய ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், கிளை துணை மேலாளரைக் கண்டித்தும், நேற்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.எம்.எஸ்., போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில், அரசுப் போக்குவரத்து கழக கிளை வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மண்டல தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். திருப்பூர் மண்டல தலைவர் சிவகுமார் தலைமை வகித்தார். பொது செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட செயல் தலைவர் செந்தில்குமார் மற்றும் மண்டல நிர்வாகிகள் கணேசன், கண்ணன், பூபதி, முருகேஷ் உள்ளிட்டோர் பேசினர்.இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.