உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எர்ணாகுளத்துக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு

எர்ணாகுளத்துக்கு பஸ் பயணிகள் எதிர்பார்ப்பு

திருப்பூர் : திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இரவு 10:10 மணிக்கு எர்ணாகுளத்துக்கு கேரள மாநில அரசு பஸ் இயக்கப்படுகிறது.அவிநாசி, கோவை, வாளையாறு, பாலக்காடு, திருச்சூர் வழியாக மறுநாள் அதிகாலை, 4:15க்கு பஸ் எர்ணாகுளம் சென்றடைகிறது. தினசரி, 50 - 60 பேர் பயணிக்கின்றனர். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறது.ஆனால், திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், எர்ணாகுளத்துக்கு நேரடி பஸ் இல்லை. கோவை அல்லது பாலக்காடு சென்று பஸ் மாற வேண்டியுள்ளது. மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து பொள்ளாச்சி வழியாக, கேரள மாநிலம், பாலக்காடு, திருச்சூருக்கு மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது.பயணிகள் கூறுகையில், ''திருப்பூர் மண்டலம், பழநியில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடியும் முன், திருப்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு பஸ் இயக்கத்தை துவங்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி