உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தாய்நாட்டை காத்த வீரர் கரங்களில் பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு பணி

தாய்நாட்டை காத்த வீரர் கரங்களில் பஸ் ஸ்டாண்ட் பாதுகாப்பு பணி

திருப்பூர்: திருப்பூர், காமராஜ் ரோட்டில், மாநகராட்சிக்குச் சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்ட் வளாகம் அமைந்துள்ளது.பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கடைகள் முன் ஆக்கிரமிப்பு, போதை ஆசாமிகள் நடமாட்டம், பஸ் தாறுமாறாக நிறுத்துவது, இரு, நான்கு சக்கர வாகனங்களை இஷ்டம் போல் நிறுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இது குறித்த தொடர் புகார்களின் பேரில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதனடிப்படையில் தற்போது, தனியார் செக்யூரிட்டி நிறுவனம் சார்பில், முன்னாள் ராணுவத்தினர் எட்டு பேர் இங்கு தற்போது பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக இவர்கள் அனைவரும் காலை முதல் மாலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ