உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.3.46 கோடியில் பஸ் ஸ்டாண்ட் குன்னத்துாரில் அமைகிறது

ரூ.3.46 கோடியில் பஸ் ஸ்டாண்ட் குன்னத்துாரில் அமைகிறது

குன்னத்துார்: குன்னத்துார் பேரூராட்சி, பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டு, 35 ஆண்டுகள் ஆகிறது. இதனால், கட்டடம் உடைந்து சிதைந்து காணப்பட்டது. பஸ் ஸ்டாண்டில் பழைய கட்டடத்தை அகற்றி விட்டு புதிய கட்டடம் கட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு கோடியே 46 லட்சம் ரூபாய், பொது நிதி ஒரு கோடி ரூபாய் என மொத்தம் மூன்று கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிதியில், 10 கடைகள், நவீன குளியல் மற்றும் கழிப்பறை, பயணிகள் இருக்கைகள் மற்றும் ஓய்வு அறை, தாய்மார்கள் பாலுாட்டும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகிறது. தற்போது, பஸ் ஸ்டாண்டின் பழைய கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதை தொடர்ந்து, ஒரு ஆண்டில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை