உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இந்திரா நகரில் பஸ் ஸ்டாப் கட்டணும்

இந்திரா நகரில் பஸ் ஸ்டாப் கட்டணும்

உடுமலை; உடுமலை, தாராபுரம் ரோட்டில், இந்திரா நகர் உள்ளது. திருப்பூர் ரோடு சின்னவீரம்பட்டி, சின்னப்பன்புதுார் மற்றும் உடுமலை, தாராபுரம் ரோடு என நான்கு ரோடு சந்திப்பில் அமைந்துள்ள, இப்பகுதியில், நுாற்றுக்கணக்கான வீடுகள், நுால் மில்கள், தொழிற்சாலைகள் உள்ளன.தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இப்பகுதி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூரை இருந்தது. ரோடு விரிவாக்கத்திற்காக பஸ் ஸ்டாப் இடித்து அகற்றப்பட்டது.ரோடு விரிவாக்கம், மையத்தடுப்புகள் அமைக்கப்பட்ட நிலையில், அகற்றப்பட்ட பஸ் ஸ்டாப் நிழற்கூரை புதிதாக கட்டப்படவில்லை.எனவே, இந்திரா நகர் பகுதியில், இரு புறமும் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை