உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருநள்ளாறுக்கு பஸ் இயக்க வேண்டும்

திருநள்ளாறுக்கு பஸ் இயக்க வேண்டும்

திருநள்ளாறுக்கு பஸ் இயக்க வேண்டும்

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அருகே உள்ளது, திருநள்ளாறு, தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில். சனிதோஷ பரிகாரங்களுக்காக, இக்கோவிலுக்கு, தினமும் ஏராளமானோர் பக்தர்கள் செல்கின்றனர். திருப்பூரில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் குருவாயூர், கர்நாடகாவில் மைசூர், பெங்களூருக்கு பஸ் இயக்கப்படுகிறது. குறிப்பாக, இரவு துவங்கி, மறுநாள் காலை பயணம் நிறைவு பெறும் வகையில் இத்தகைய பஸ்கள் இயங்குவதால், பயணிகள் பயன்பெறுகின்றனர்.ஆனால், திருப்பூரில் இருந்து புதுச்சேரிக்கு பஸ் வசதியில்லை. குறிப்பாக, காரைக்கால் மற்றும் திருநள்ளாறு செல்ல நேரடி பஸ் இல்லை. நாகப்பட்டினம் அல்லது தஞ்சாவூர் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோடை விடுமுறை துவங்க உள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து திருச்சி, தஞ்சாவூர் வழியாக திருநள்ளாறுக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை