உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செயற்கை உறுப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செயற்கை உறுப்புகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

திருப்பூர்:செயற்கை கை, கால் போன்ற உடல் உறுப்புகள் தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவற்றை வழங்கும் திவ்யாங்ஜன் சேவையை, ஸ்ரீசத்ய சாயி சேவா அமைப்பு வழங்குகிறது. இதில் பயன்பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, ஸ்ரீசத்ய சாயி சேவா அமைப்பு தமிழக துணை தலைவர் சாய் ஸ்ரீதர் கூறியதாவது:பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின், 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீ சத்ய சாயி நிறுவனங்களால் மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் விதமாக, ஸ்ரீசத்ய சாயி திவ்யாங்ஜன் சேவை என்ற பெயரில் செயற்கை அவயங்கள் வழங்கப்படுகின்றன. உடல் உறுப்புகள் இழந்து தவிக்கும் பலர் செயற்கை உடலுறுப்புகளை எதிர் நோக்கி இருப்பர்; அதற்கான பொருளாதார சூழல் அல்லது எப்படி பெறுவது என்ற வழிமுறை தெரியாமல் இருப்பர். அவர்களுக்கு உதவும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.செயற்கை அவயம் தேவைப்படுவோர் பின்வரும் செயலியை பதிவிறக்கம் செய்து தங்களைப் பற்றி பதிவிட வேண்டும்.தேவையான செயற்கை அவயங்கள் எந்தவித கட்டணமும் இன்றி வழங்கப்படும். https://play.google.com/store/apps/details?id=com.sssdivyangaseva, உரிய விபரங்களை பதிவிட்டு, 72008 67921 என்ற வாட்ஸாப் எண்ணுக்கு அதை அனுப்ப வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை