மேலும் செய்திகள்
மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்
30-Nov-2025
திருப்பூர்: வரும், 2026ம் ஆண்டுக்கான கபீர் புரஸ்கார் விருது பெற, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. குடியரசு தினவிழாவின் போது, தமிழக முதல்வரால், கபீர் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, சமுதாய நல்லிணக்க செயலாற்றல் பணிகளில் ஈடுபடுவர்கள் இவ்விருது பெற விண்ணப்பிக்கலாம். கலவரம், வன்முறை செயலில் இருந்து காப்பாற்றிய நபரை பாராட்டும் வகையிலும், இவ்விருது வழங்கப்படுகிறது. மாநில அளவில், மூன்று நபர்களுக்கு, 20 ஆயிரம், 10 ஆயிரம் மற்றும் 5,000 ரூபாயும் வழங்கப்படும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (http://awards.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, வரும் 15 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
30-Nov-2025