மானியத்தில் தென்னங்கன்று விவசாயிகளுக்கு அழைப்பு
உடுமலை: அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், ராகல்பாவி, போடிபட்டி, பெரியகோட்டை, மானுப்பட்டி, தேவனுார்புதுார், ராவணாபுரம், பெரியபாப்பனுாத்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு வேளாண் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது தோட்டக்கலைத்துறை சார்பில் இக்கிராம விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. ஒரு கிராமத்துக்கு, 300 வீதம், விவசாயிக்கு தலா 2 தென்னங்கன்றுகளும் வழங்க உள்ளனர். தேவைப்படும் விவசாயிகள், ஆதார் அடையாள அட்டை நகலுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.