உள்ளூர் செய்திகள்

மாவிளக்கு வழிபாடு

உடுமலை; மழை பெருக்கி, மண் செழிக்க வைக்கும் மாரியம்மனுக்கு, நெல், எள், பயறு வகைகள் என நவதானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டு, வேளாண்மை செழிக்க வேண்டி, முளைப்பாலிகை எடுத்து வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.நெருப்பில் இருந்து அம்மன் உருவமாய் காட்சியளித்ததால், வேண்டுதல் நிறைவேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து அம்மனை வழிபடுகின்றனர்.நோய்களிலிருந்து மக்களை காக்க, பச்சரிசியில் மாவிட்டு, விளக்கேற்றி வழிபடுகின்றனர். மேலும், தீர்த்தமும், திருநீரும் மருந்தாகும் என்ற அடிப்படையில், அம்மனுக்கு தினமும் தீர்த்தம் கொண்டு வந்து, திருக்கம்பத்திற்கு ஊற்றி, வேப்பிலை, எலுமிச்சை வைத்து வழிபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ