உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்கம்பத்தில் கார் மோதல்: 4 பேர் காயம்

மின்கம்பத்தில் கார் மோதல்: 4 பேர் காயம்

தாராபுரம் ;தாராபுரம் அருகே மின் கம்பத்தில் கார் மோதி, அதில் பயணம் செய்த நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.தாராபுரத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ், 25. நாகராஜ், 51, பண்ணாரி, 46, நாகலட்சுமி, 45 ஆகியோருடன் காரில் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் - தாராபுரம் ரோட்டில் நேற்று சென்று கொண்டிருந்தார்.எதிர்பாராத விதமாக கார் ரோட்டோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. நாகராஜ் படுகாயமடைந்தார். மற்ற, மூன்று பேரும் லேசான காயத்துடன் தப்பினர். காயமடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை